ஆஸ்டினால் ஆவேசமாகி… அவையில் டென்சன் ஆன எடப்பாடி: வைரலாகும் வீடியோ!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
edappadi speech - 2026

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று உரை நிகழ்த்திய போது தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் நடுவில் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆவேசமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடுமையாக டென்சன் அடைந்தார்.

திமுக., உறுப்பினர்கள் எப்போதும் இப்படித்தான்.. எப்பப் பாத்தாலும் எந்திரிச்சிக்கிட்டே இருந்தா… இதெல்லாம் தவறுங்க.. என்னங்க அர்த்தம்..?! பேசிக்கிட்டே இருக்கீங்க? என்ன நினைச்சிட்டிருக்கீங்க நீங்க எல்லாம்?! யாரு பேசினாலும் சரி… என்று டென்சன் ஆகி சத்தம் போட்டார். இதற்குக் காரணம் திமுக. உறுப்பினர் ஆஸ்டின்.

அதைத் தொடர்ந்து அவைத்தலைவர் அவரை சமாதானப் படுத்தியதால் அப்படியே சீட்டில் அமர்ந்தார் எடப்பாடி. இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.