
சென்னை:
நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தினருக்கு விதித்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு கடிதம் தற்போது உலா வருகிறது. அதில், கட்டுப்பாடு, ஒழுக்கம், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினி ரசிகர் மன்றத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடக்கும் உறுப்பினர்களை நீக்க தலைமைமன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ரஜினி.



