வறுமையில் தவிக்கும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு உதவாத அறநிலையத்துறை: ஸ்ரீவி. ஜீயர் வருத்தம்!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி மதுரை
srivillipurthur jeeyar
srivillipurthur jeeyar

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீசடகோப இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் வெளியிட்ட அறிக்கையில்…

தமிழக இந்து சமய அறநிலையத் துறை 47 திருக்கோவில்களின் உபரி வருமானத்திலிருந்து 10 கோடி ரூபாயை எடுத்து தமிழக அரசிற்கு கொரோனா நிதியாக கொடுக்க உத்தரவிட்டிருப்பது வருந்தத்தக்கது. ஏனெனில் தமிழக அரசிற்கு நிதியை பல தொழிலதிபர்கள், வியாபார நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள் அள்ளித் தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பல கிராமக் கோவில்கள், ஹிந்து சமய கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள் நைவேத்தியத்திற்கும், விளக்கேற்றுவதற்கும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அந்தந்த திருக்கோவில்களில் கடவுள்களுக்கு திருப்பணியாற்றும் பட்டர்களுக்கும், குருக்களுக்கும், கிராம பூசாரிகளுக்கும் எந்த வருமானமும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் இந்து சமய அறநிலையத்துறை செய்து கொடுக்காமல் அந்த நிதியை வேறு காரணங்களுக்காக தமிழக அரசிற்கு கொடுத்திருப்பது மிகவும் வருத்தமளிக்கின்ற செயலாக இருக்திறது.

ஆகவே இந்து சமய அறநிலையத்துறை இந்த முடிவை கைவிட்டு ஏழ்மை நிலையில் வாடும் கிராம கோவில் பூசாரிகளுக்கும், பட்டர்களுக்கும், குருக்களுக்கும் அந்த நிதியைப் பயன்படுத்தவும், மேலும் திருக்கோவில்களில் உள்ள சுவாமிகளுக்கு நைவேத்தியம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கவும் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.