
களக்காடு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி வழங்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியது போல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு திருக்கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றுவதற்கு அனுமதி வழங்க கோரி இன்று 19.5.2020 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி தலைமையில் பல்வேறு கோயில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் குற்றாலநாதன் (இந்துமுன்னணி மாநிலச் செயலாளர்) தங்க மனோகர் (இந்துமுன்னணி கோட்டத் தலைவர்), சக்திவேல் (இந்துமுன்னணி கோட்ட செயலாளர்) பிரமநாயகம் (இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர்) சிவா
(இந்துமுன்னணி மாவட்ட செயலாளர்), பரமசிவம் (பக்தர் பேரவை மாவட்ட செயலாளர்) சுப்பிரமணியன் (பக்தர் பேரவை மாவட்ட துணைத்தலைவர்) மற்றும் 53 திருக்கோயில்களை சார்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சிரஸ்தார் வாயிலில் வந்து அனைவரிடமும் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பள்ளி வாசலை திறந்து கஞ்சி ஊற்ற அனுமதி வழங்கியிருந்தார் நெல்லை மாவட்ட ஆட்சியர். அவரது அனுமதிக் கடிதம்..



இந்நிலையில், பள்ளிவாசலுக்கு நோன்புக் கஞ்சி ஊற்ற அனுமதி வழங்கியது போல், கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி, நெல்லை ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர் இந்து முன்னணியினர். அந்தக் கடிதம்…
அனுப்புனர்
M. ராஜசெல்வம்
த/பெ முருகன்
செண்பகம் பிள்ளை இரட்டை தெரு
திருநெல்வேலி டவுன்
பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு அரசு விதிமுறைகள் படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கூழ் காய்ச்சி ஊற்ற அனுமதி வேண்டி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் காய்ச்சி ஊற்ற அனுமதி வேண்டி அனைத்து வட்டாட்சியர்களிடத்திலும் இந்து முன்னணி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த மனுக்களுக்க்கும் அரசின் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் களக்காடு விஜயராஜபுரம் பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் செயலாளர் 12.5.2020 ல் கஞ்சி காய்ச்சி ஊற்ற அனுமதி கேட்டு அதற்கு மறுநாளே 13.5.2020 அன்று மாவட்ட ஆட்சியர் தாங்கள் ந.க.உ.5 /10252/2020 நாள் 13.5.2020 ன் படி அனுமதி வழங்கியுள்ளீர்கள்.
அதுபோல் நான் வசித்து வரும் திருநெல்வேலி வட்டம் நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை தெருவில் அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோவிலில் வருகிற 22.5.2020 வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு முழுமையாக தளர்வடையும் வரை திமும் ஏழை எளிய மக்களுக்கு அரசு விதிமுறைகளின்படி சமுக இடைவெளி கடைபிடித்து மதியம் 12 மணி முதல் 2 மணி வரை விட்டு கூழ் காய்ச்சி ஊற்ற பாரபட்சமின்றி அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…