December 6, 2025, 3:30 PM
29.4 C
Chennai

சலூன் கடைக்கு போறீங்களா…? இவ்ளோ அறிவுரைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கு… கவனிச்சுக்கோங்க!

barber shop in mp
barber shop in mp

முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் பிறப்பித்த உத்தரவு இது.

கொரேனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு அமுலில் இருந்தாலும், மக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்கள்.

அதனடிப்படையில் ஊரகப்பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதியளித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அவ்வாறு ஊரகப்பகுதிகளில் திறக்கப்படும் முடிதிருத்தும் நிலையங்களில் அதன் உரிமையாளர்களும், பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் கடைபிடிக்க வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் நிலையங்கள் பின்வரும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள்:

முடி திருத்தும் நிலையத்தின் நுழைவாயிலில், சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பானை ( hand sanitizer ) நுழை வாயிலில் வைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களின் பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

முடி திருத்தும் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் , முடி திருத்தும் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பும் , வாடிக்கையாளருக்கு முடி திருத்தும் பணியினை துவங்கும் முன்னரும் , சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்திகரிப்பானைக் ( hand sanitizer ) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

இத்தகைய சுய தூய்மை நடைமுறைகளை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முடிதிருத்தும் பணியை துவக்கும் முன்பும் செய்ய வேண்டும். முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர்களும், பணியாளர்களும் கட்டாயம் முகக் கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் , அடிக்கடி தங்களது மூக்கு , வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் .

முடி திருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளருக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின், அவர்கள் அரசு மருத்துவமனையை அணுகி , பரிசோதனை மேற்கொண்டு , மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் எக்காரணத்தை கொண்டும் அவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது

காய்ச்சல் , சளி , இருமல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும் போது , முடி திருத்தம் போன்ற சேவைகளுக்கு முடிதிருத்தும் நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரக்கூடாது. அத்தகைய வாடிக்கையாளர்களை கடையின் உரிமையாளர்கள் அனுமதிக்கவும் கூடாது.

அவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விபரத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு முடி திருத்தும் நிலையத்திலும் மேற்சொன்ன அறிவிப்புடன் கூடிய காட்சிப் பலகை வைக்கப்பட வேண்டும்.

சமூக விலகலை பின்பற்றும் வகையில், முடி திருத்தும் நிலையங்களில் உள்ள மொத்த இருக்கைகளுள், 50 விழுக்காட்டிற்கு மேலான இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்வதை தவிர்ப்பதோடு , ஒருவொருக்கொருவர் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர வேண்டும் .

முடி திருத்தும் நிலையங்களின் வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்க போடப்பட்டுள்ள இருக்கைகளில் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே காத்திருக்க அனுமதிக்க வேண்டும் .

ஒற்றை நாற்காலி உள்ள முடி திருத்தும் நிலையங்களில் , ஒரு வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . . முடி திருத்தும் நிலையங்கள் காற்றோட்டமாக இருப்பதுடன் , காற்றோட்டத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஜன்னல்களும் திறக்கப்பட்டிருக்க வேண்டும் .

முடிதிருத்தும் நிலையங்களில் , குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது .

முடி திருத்தும் நிலையங்களின் தரைகள் மற்றும் அடிக்கடி தொடக்கூடிய பொருட்களான நாற்காலிகள் , கைப்பிடிகள் , மேஜைகள் , கதவின் கைப்பிடிகள் , கண்ணாடிகள் , தண்ணீர் குழாய்கள் ஆகியவற்றை , கிருமிநாசினிகளான 1 % ஹைப்போகுளோரைட் கரைசல் ( 30 லிட்டர் தண்ணீரில் கரைக்கப்பட்ட 1 கிலோ பிளீச்சிங் பவுடர் ) அல்லது 2.5 % லைசால் ( 19 லிட்டர் தண்ணீரில் கரைக்கப்பட்ட 1 லிட்டர் லைசால் ) கரைசலைக் கொண்டு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் .

முடி திருத்தும் நிலையங்களின் தரைப்பகுதி சுத்தமாக பராமரிக்கப்படுவதோடு , ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முடி திருத்தம் செய்து முடித்த பின்னர் , தரையில் விழும் முடியை அகற்றி , 2.5 % லைசால் கரைசலைக் கொண்டு தரைப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் . .

வாடிக்கையாளருக்கு முடிதிருத்தம் செய்து முடித்த உடன், கிருமிநாசினியான 2.5 % லைசால் கரைசலைக் கொண்டு நாற்காலிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் . சீப்பு , கத்திரிக்கோல் , சவரக்கத்தி மற்றும் முடி உலர்த்தும் உபகரணங்கள் ஆகியவற்றை அடுத்த வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் சுத்திகரிப்பான் ( sanitizer ) கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் .

மேலும், கிருமிநாசினிகள் ( லைசால் அல்லது டெட்டால் ) நிரப்பப்பட்ட தொட்டிகளில் உபகரணங்கள் சுத்தம் செய்யப்பட்டு, முடி உலர்த்தும் இயந்திரங்களைக் கொண்டு உலர்த்தப்பட வேண்டும் . ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்பட்ட பிளேடு மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்படக் கூடாது .

ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட பிளேடுகள் சுகாதார முறையில் அகற்றப்பட வேண்டும். முடி உள்ளிட்ட கழிவுகள் மற்றும் முகச்சவரம் அல்லது முடித்திருத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட நுரை / குழைமம் ஆகியவை சுகாதார முறையில் அகற்றப்பட வேண்டும் .

களையக்கூடிய ( Disposable ) மேலங்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும் . மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய மேலங்கிகள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகளில் , அவை ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு , சலவை செய்த பின்னரே மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்த வேண்டும்.

முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர் / மேலாளர் / பணியாளர் ஆகியோர் முடி திருத்தும் நிலையத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் சுகாதாரமான முறையில் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் .

வாடிக்கையாளர்களுக்கான அறிவுரைகள்:

முடி திருத்தும் நிலையத்திற்குள் நுழையும் முன்னரும் , முடி திருத்தும் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் முன்னரும், அனைத்து வாடிக்கையாளர்களும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்திகரிப்பானைக் ( hand sanitizer ) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் . அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் முடி திருத்தும் நிலையங்களில் முறையாக பின்பற்றப் படுகின்றதா என்பது குறித்து அரசு அலுவலர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படும்.

எனவே, மேற்சொன்ன தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முடிதிருத்தும் நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories