காதலியை கர்ப்பமாக்கி விட்டு இன்னொரு பெண்ணையும் மணந்த இளைஞர்!

orathanadu - 2026

ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (29). இவர் அதேபகுதியில் கூல்ட்ரிங்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரும் இடையாத்தி கிராமம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகள் முதுநிலை பட்டதாரியான சண்முகப் பிரியாவும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட லெனின் கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி சண்முகப்பிரியாவிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, சண்முகப்பிரியா கர்ப்பமாகிவிட தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லெனினிடம் பலமுறை கேட்டள்ளார். ஆனால், கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி லெனின் சண்முகப்பிரியாவிடம் கூறியிருக்கிறார்.

ஆனால், சண்முகப்பிரியா கர்ப்பத்தைக் கலைக்கவில்லை. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சண்முகப்பிரியா புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் சண்முகப்பிரியாவால் ஊருக்கு வர முடியவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்ட லெனின் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரக்கண்ணு என்பவரின் மகளான ஐஸ்வர்யா என்ற முதுநிலை பட்டதாரி பெண்ணை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய சண்முகப்பிரியாவுக்கு லெனின் திருமணம் செய்த விஷயம் தெரியவந்துள்ளது.

உடனே லெனினை தொடர்புகொண்டு கேட்டதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து சண்முகப்பிரியா, “லெனின் என்பவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். அவரால் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன். அவர், மீது நடவடிக்கை எடுங்க. என்னுடன் சேர்த்து வைங்க’ என பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

சண்முகப்பிரியா போலீஸிடம் புகார் கொடுத்ததையறிந்த லெனின் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, உயிருக்குப் போராடிய அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவரின் உறவினர்கள். அங்கு லெனினுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை நிறைமாத கர்ப்பிணியான சண்முகப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர் சண்முகப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த லெனின், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது சண்முகப்பிரியாவின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஒரு இளைஞர் செய்த தவறான செயலால் இன்றைக்கு இரண்டு பட்டதாரி பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டது. இதில், கொடுமை என்னவென்றால் சண்முகப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது தெரியாமலேயே லெனின் இறந்துவிட்டார்.

லெனினை நம்பி காதலித்த சண்முகப்பிரியா மற்றும் பெற்றோரால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு லெனினை கரம் பிடித்த ஐஸ்வர்யா என இரண்டு பெண்களின் நிலையை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. இதுகுறித்து வாட்டாத்திக் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories