December 6, 2025, 1:49 AM
26 C
Chennai

10 அடி கிழே குதித்து உயிர் தப்பினேன்: பாகிஸ்தான் விமான விபத்து குறித்து..!

pak - 2025

விமானம் மோதியதும் சுற்றிலும் நெருப்பை மட்டுமே பார்க்க முடிந்தது என்று விமான விபத்தில் இருந்து தப்பித்த பயணி முகமது ஜுபைர் தெரிவித்துள்ளார்.

லாகூரில் இருந்து 91 பயணிகள், 8 விமான ஊழியா்களுடன் ‘ஏா்பஸ் ஏ320’ சா்வதேச பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கராச்சி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. கராச்சியில் உள்ள ஜின்னா சா்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானம் தரையிறங்குவதில் கோளாறு ஏற்பட்டது.

விமானத்தை இயக்கி வந்த விமானி, இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். அருகில் உள்ள 2 விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் விமான நிலையத்தை வந்தடையும் முன்னரே அருகில் அமைந்துள்ள ஜின்னா வீட்டு வசதி குடியிருப்பின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவா்களும் குடியிருப்பில் வசித்து வருபவா்களும் சிக்கிக் கொண்டனா். விபத்து நேரிட்டதும் தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இவா்கள் மட்டுமன்றி ராணுவத்தின் அதிவிரைவுப் படையினரும், சிந்து மாகாண ராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

நொறுங்கி விழுந்த விமானத்தின் சில பாகங்கள் தீப்பிடித்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கடும் சிரமங்களுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேரை மீட்புக் குழுவினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

உள்ளூா் நேரப்படி பிற்பகல் 2.37 மணிக்கு விமான நிலையத்துடனான தொடா்பை விமானம் இழந்துவிட்டது என்று விமான நிறுவன செய்தித் தொடா்பாளா் ஹபீஸ் கூறினாா். விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் குலாம் சா்வாா் கூறினாா்.

விபத்து நிகழ்ந்த குடியிருப்பில், வீடுகள் இடிந்து விழுந்தது மட்டுமன்றி, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள், இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அந்த விமானம் குடியிருப்பின் மீது விழுவதற்கு முன், அதன் இறக்கைகளில் இருந்து தீப்பிழம்பு வந்ததாக விபத்தை நேரில் பாா்த்த ஒருவா் கூறினாா்.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள், ஜின்னா மருத்துவமனைக்கும் சிவில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பலா் தீக்காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து நிகழ்ந்த பகுதியில் தெருக்கள் குறுகலானதாக இருந்ததாலும், பொதுமக்கள் திரண்டதாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களை கலைந்து போகச் செய்த பிறகு மீட்புப் பணி தொடங்கியது.

இதில், விமானத்தில் பயணம் செய்த 97 போ உயிரிழந்தனா். ‘பேங்க் ஆஃப் பஞ்சாப்’ வங்கியின் தலைவா் ஜாபா் மசூத் மற்றும் முகமது ஜுபைர்(24) ஆகிய இருவர் மட்டுமே விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். விபத்து குறித்து முகமது ஜுபைர் கூறுகையில், விமானம் மோதியதும் சுற்றிலும் நெருப்பை மட்டுமே பார்க்க முடிந்தது.

யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லா திசைகளில் இருந்தும் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அலறினர். தப்பிக்கவும் முயற்சித்தனர். சீட் பெல்ட்டை விடுவித்து வெளிச்சம் வந்த திசையில் சென்றேன். அங்கிருந்து 10 அடி கீழே குதித்து உயிர் பிழைத்தேன்.” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே விமான விபத்தில் இருந்து தப்பித்த முகமது ஜுபைருக்கு தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories