
தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.
முன்னதாக அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், வரும் 24, 25ம் தேதிகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ரமலான் பிறை இன்று தென்படாததால் வரும் திங்கள்கிழமை (மே.25) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்…
பிறை அறிவிப்பு: தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 23/5/2020 அன்று மாலை ஹிஜ்ரி 1441 ஷவ்வால் பிறை தென்படாததால் 25/5/2020 திங்கள்கிழமை அன்று ஷவ்வால் பிறை 1 ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என அறிவிக்கப்படுகிறது.
- தலைமை காஜி, சென்னை.
