ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபட பக்தர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ் நாட்டில் உள்ள கோயில்களை தக்க முன்னேற்பாடுகள், நடவடிக்கையோடு திறக்கக் கோரி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்கள் முன்பு, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து முன்னணியினர் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு தமிழக அரசுக்கும் அறநிலை துறைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது