
கரூரில் இருந்து இன்று காலை முதல் திருச்சி, கோவை, ஈரோடு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சியில் பேருந்துகள் காலை முதல் இயங்கத் தொடங்கின. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பேருந்துகள் இயங்கப் படாமல் இருந்தன.

தற்போது 2 மாதங்களுக்கு பின்பு 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் , கடலூர் , திருவண்ணாமலை என 30 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 7 மணிக்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கின.
பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அவசியம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கின
- பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
- பயணிகள் பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்படுகிறார்கள்
- பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்டது
- டிரைவர், கண்டக்டர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.