
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று ‘முதல்’ கொரோனா covid-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது .
இதுவரை கொரோனாவால் பாதிக்கப் படாத பகுதியாக, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி இருந்தது. சுகாதாரத் துறையினர் இத்தனை நாட்களும் கிருமிநாசினி தெளித்து, முக்கியமான சாலைகளை அடைத்து, எச்சரிக்கையுடன் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
உள்ளூர் மருந்துக் கடைகள் எச்சரிக்கை செய்யப் பட்டு, காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி குறித்து யார் மருந்து வாங்க வந்தாலும், சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியரின் உத்தரவு இடப் பட்டிருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரம் மும்பையில் இருந்து செங்கோட்டைக்கு வந்த நபர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அதுவும் செங்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து பிரதான மகளிர் பள்ளி செல்லும் பாதையில் என்பதால், அந்தப் பகுதி முழுதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது.
கொரோனா தற்போது சமூகத் தொற்றாக உருவெடுத்திருப்பதால், செங்கோட்டை மக்கள் எச்சரிக்கையுடன் பொது இடங்களில் அணுகுமாறு சுகாதாரத்துறையினரும் செங்கோட்டை நகராட்சியினரும் கேட்டுக்கொண்டுள்ள்ளனர்.