
மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு பற்றி அச்சப்பட தேவை இல்லை – மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மதுரை வசந்த நகரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் வசுதாரா வீட்டு உரிமையாளர் நல சங்கம் மற்றும் மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலையில் வசுதாரா வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு சார்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் குடியிருப்புப் பகுதி பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வசுதாரா வீட்டு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளிதரன் செயலாளர் விவேகானந்தன் மற்றும் ரோட்டரி சங்க செயலாளர் பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், மதுரை மாநகராட்சி சார்பில் ஒரு லட்சத்து பத்து ஆயிரம் குடியிருப்பு வளாகங்களுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சகதி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஊரடங்கு இருந்து கொண்டு உள்ளது, நாளை முதல் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்கானிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரையில் மருத்துவ பரிசோதனைகள் அதிக படுத்தபட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளை அதிக படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த மதுரை எம்.பி.வெங்கடேசனே அரசை பாராட்டியுள்ளார். மதுரை மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் காய்கறி மார்க்கெட், இறைச்சி,மீன் கடைகளில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மதுரை மக்களிடம் கேட்டு கொள்கிறோம்
மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு பற்றி அச்சப்பட தேவை இல்லை என்று கூறினார்.
- ரவிச்சந்திரன், மதுரை