மூன்று மாதங்களுக்குப் பிறகு… மதுரை மாவட்ட நீதிமன்றம் திறப்பு!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai court
madurai court முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி. நசீமாபானு, சார்பு நீதிபதி. தீபா, ரெட் கிராஸ் நிர்வாகிகள். ஜோஸ், கோபாலகிருஷ்ணன், வக்கீல். முத்துக்குமார், ஆகியோர் உள்ளனர்..

சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு மதுரை மாவட்ட நீதி மன்றம் இன்று திறக்கப்பட்டது. 

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஐந்து வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப் பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் இந்தியன்  ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற  பணியாளர்களுக்கு ‘கொரோனா ‘ அறிகுறி பரிசோதனை, செய்யப்பட்டது.

கிருமிநாசினி – சானிடைசர், மாஸ்க் – முகமூடி உள்ளிட்டவை வழங்கப் பட்டன. கட்சிக் காரர்கள், வெளி நபர்கள் யாரும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க பட வில்லை..

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.