வீடு புகுந்து மிரட்டிய மதுரை திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!

Published:

dmk mla
dmk mla
  • மதுரை திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
  • பா.ஜ. பிரமுகர் மீதும் கமிஷனரிடம் புகார் .

மதுரை திமுக எம்எல்ஏ மூர்த்தி தொடர்பான சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய காட்சி தொடர்பாக திமுக, பாஜக தனித்தனியாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

சமூக வலைதளங்களில் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி எம்எல்ஏ பாஜக., நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்குச் சென்று அவரை தாக்க முயற்சிக்கும் சில காட்சிகள் வைரலாக கட்டப்பட்டது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் தலைமையில் சில வழக்கறிஞர்களும் திமுக மூர்த்தி சார்பாக வழக்கறிஞர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.

அதில் திமுக வழக்கறிஞர் கூறியதாவது: கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மூர்த்தியின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். ஆதனால் அவருடைய செல்வாக்கு உயர்வதை கண்டு பாஜகவினர் அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதுதொடர்பாக அவர் வீட்டில் சென்று கேட்டதாகவும் தாக்கும் எண்ணத்தில் எந்த செயலும் நடைபெறவில்லை , மேலும் திமுக எம்எல்ஏ மூர்த்தி அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சங்கரபாண்டியன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் புகார் மனு அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது: பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத திமுகவினர் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்குச் சென்று அவரையும் அவரது மனைவியையும் தாக்கும் செயலிலும், துப்பாக்கியை காட்டி மிரட்டும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார் .

மதுரையில் பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகரை தாக்க முயன்றதாக எழுந்த புகாரில் மதுரை கிழக்குச் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img