இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர்… ‘கும்பல் மிரட்டலால்’ தூக்கில் தொங்கிய பரிதாபம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
trichy lovers boy suicide
trichy lovers boy suicide

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தன் மகள் வேற்று மதத்தைச் சேர்ந்த இளைஞனைக் காதலித்ததால், தன் மகளை மறந்துவிடு என்று அந்தக் காதலனை அடித்துத் துவைத்து கொலை மிரட்டல் விடுத்தும், தம் மகளையும் அந்த இளைஞன் கண் முன்பே அடித்து  சித்திரவதை செய்தும் பெண்ணின் தாய் மற்றும் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த காதலன் பயத்தின் உச்சத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த விவகாரம் குறித்து போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சிப் பகுதியில்  உள்ளது அம்பலகாரத் தெரு. இந்தத் தெருவில் வசித்து வந்தவர் ரங்கராஜன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்! 

ரங்கராஜன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், விஜயாவும் அவரது  கடைசி மகன் 21 வயதான தினேஷ் ஆகியோரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தினேஷ், டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஆந்திராவில் ரயில்வே ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வந்தார். கொரோனா முழு முடக்கம் காரணமாக, அங்கிருந்து தமது சொந்த ஊரான திருச்சி, சமயபுரத்திலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே தினேஷ் கடந்த 3 வருடங்களாக சமயபுரம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த வேற்று சமூகத்தினைச் (முஸ்லிம்) சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து பெண் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தினேஷும், அந்தப் பெண்ணும்  காதலிப்பதை தெரிந்து கொண்டு கடந்த புதன்கிழமை பெண்ணின் தாய், பெரியம்மா, தம்பி உள்ளிட்ட பெண்ணின் குடும்பத்தா,  நண்பர்கள் என 10க்கும் மேற்பட்டோர், ஒரு கும்பலாக தினேஷ் வீட்டுக்கு வந்துள்ளனர். 

தங்கள் வீட்டுப் பெண்ணை காதலிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு அவர்கள் தினேஷை மிரட்டி உள்ளனர். தினேஷ் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்தப் பெண்ணை தினேஷ் வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். பிறகு அந்தப் பெண்ணை தினேஷின் கண் முன்பே அடித்து சித்திரவதை செய்துள்ளனர் 

தன் கண்முன் காதலி அடி வாங்குவதை பார்த்து பொறுக்கமுடியாமல் தினேஷ் தாம் இனி அந்தப் என்னை காதலிப்பதை விட்டு விடுவதாகவும் அந்த பெண்ணுடன் பேசமாட்டேன் என்றும் அழுது புலம்பியுள்ளார்

ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணை காதலிப்பதை விட்டு விட்டால் மட்டும் போதாது ஒரு பத்திரத்தில் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று மிரட்டியுள்ளனர் இதையடுத்து தினேஷ் ஒரு பத்திரத்தில் அவர்கள் சொல்வதை எழுதிக் கொடுத்துள்ளார் 

இதன்பின்னர் மனமுடைந்து காணப்பட்ட தினேஷ் இனி தனது காதலியை பார்க்க முடியாதோ என்ற மன உளைச்சலில் தனிமையில் தவித்து உள்ளார் அப்போது இரவு நேரத்தில் வீட்டின் உள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து தினேஷ் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர் 

தினேஷின் மரணம் குறித்து பெண்ணின் தாய் பெரியம்மா பெண்ணின் உறவினர்கள் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

தினேஷின் மரணம் குறித்து அவரது சகோதரர் கூறியபோது … எனது சகோதரன் அந்தப் பெண்ணை காதலிப்பது எங்கள் வீட்டுக்கும் அந்தப் பெண்ணின் வீட்டுக்கும் முன்பே தெரியும். அந்தப் பெண்ணின் தாய் சிறிது காலம் போகட்டும்; திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் திடீரென எங்கள் வீட்டுக்கு 10 பேருடன் வந்து என் சகோதரனையும் அந்த பெண்ணையும் அடித்து துன்புறுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி சென்றார். இதனால் மனமுடைந்த என் சகோதரன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் இதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார் 

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அந்த பெண்ணை கொன்று விடுவதாக தினேஷின் முன்பு அவர்கள் மிரட்டியதாகவும் அந்தப் பெண் காதலன் காலில் விழுந்து கதறி ஏதும் தொடர்ந்து பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு விடுத்துள்ளதாகவும் தினேஷ் வீட்டினர் தெரிவிக்கின்றனர் இதன்பின்னர் தினேஷ் ஒரு வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது 

பெண்ணைக் கொன்று விடுவதாக பையன் முன் மிரட்டியுள்ளனர். பெண் காதலன் காலில் விழுந்து கதறியதும் பத்திரத்தில் எழுதி வாங்கி விடுவித்துள்ளனர். அதன்பின் பையன் வீடியோ பதிவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டான். திருச்சி சமயபுரம் பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.