axis bank

புதுக்கோட்டை கீழராஜ வீதியிலுள்ள ஆக்ஸிஸ் வங்கியின் உதவி மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை அவர் ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து வங்கிக் கிளை முழுவதும் நகராட்சிப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து மூடினர். உதவி மேலாளரின் வீடு உள்ள புதுக்குளம் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படவுள்ளது.

அவரது உறவினர்கள், வங்கிப் பணியாளர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending