
கரூர் அருகே, இரண்டு வீடுகளின் கதவை உடைத்து தங்கநகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர்.
கரூர்-திருச்சி சாலை காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜாத்தி, 45; இவர் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், பீரோவில் இருந்த, இரண்டு பவுன் தங்கநகை, 11 ஆயிரம் ரூபாயை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, போலீசில் ராஜாத்தி புகார் செய்துள்ளார்.
அதேபோல், காந்திகிராமம் இந்திரா நகர் ரமணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 50; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மனைவியுடன், வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த, ஒரு பவுன் தங்கநகை, 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து புகார் அளித்துள்ளனர் இதனை தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.



