கறுப்பர் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் சஷ்டிகவச பாராயணம்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
nellai-kantha-sashti-kavacham3
nellai-kantha-sashti-kavacham3

நெல்லை மாநகர பாதயாத்திரை முருக பக்தர்கள் சார்பாக ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தை கண்டித்தும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் சஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது. 

தமிழ் கடவுளான முருகப் பெருமானையும் முருகப் பெருமானை போற்றி பாலதேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்தி இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் வெளியிட்ட கருப்பர் கூட்டம் என்ற திராவிடர் கழக பின்னணியிலுள்ள அமைப்பினரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாராயணம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது 

nellai-kantha-sashti-kavacham2
nellai-kantha-sashti-kavacham2

டவுண் சந்தி விநாயகர் முனையில் இன்று மாலை 5.30 மணி அளவில், திருமுருகன் திருச்சபை தென் மாவட்ட தலைமை குருசாமி எஸ்.காந்திமதிநாதன்  தலைமையில் இந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருமுருகன் படத்திற்கு பூஜை செய்து சரணகோசம் முழங்க குருசாமி காந்திமதிநாதன் பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திருமுருகன் திருச்சபை தென்மாவட்ட தலைவர்  S.விஸ்வநாதன், Blood K.உலகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் …

nellai-kantha-sashti-kavacham1
nellai-kantha-sashti-kavacham1

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன், பகவதிராஜன் (ரஜினி மன்ற செயலாளர் ) மற்றும், அம்பலவாணன், சுடலை, ராஜசெல்வம், சங்கர், நமசிவாயம், முத்துராமன், பாலாஜி, முருகேசன், சுப்பிரமணியன், முருகன், மாரியம்மாள், பகவதியம்மாள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக பாடினர். 

 இந்த நிகழ்ச்சியில் சிறுவன் ஜெய்சரன் முருகன் வேடமிட்டு பங்கேற்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.