Home சற்றுமுன் குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா ரத்து! பனிமய மாதா சர்ச் விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்!

குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா ரத்து! பனிமய மாதா சர்ச் விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்!

புரோட்டாகால் சால்னா கால் எல்லாம் அவர்களிடம் செல்லாது போல! அதே நேரம் நம் கோவில் பூசாரிக்கு இந்த மரியாதை கொடுப்பார்களா?

thuthukkudi-district
thuthukkudi-district

தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமயமாதா  சர்ச்சு விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது பனிமய மாதா சர்ச்சு விழா ஜூலை 26 முதல் ஆக.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 

முன்னதாக குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று இங்கே நடைபெறும் தசரா திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வேடங்கள் பணம் குறைந்து வருகிறார்கள் 

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான திருத் தலமாக விளங்கும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி மாத திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்நிலையில் திருக்கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில்… 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி கொடை திருவிழா இந்த வருடம் அரசின் மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுகிறது எனவே பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் திருக்கோயிலுக்கு வருகை தருவதை தவிர்க்குமாறும் அரசு உத்தரவின்படி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

kulasekaran-pattinam-adi-function-cancelled
kulasekaran-pattinam-adi-function-cancelled

அதேநேரம் தூத்துக்குடி பனிமய மாதா விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று பிஷப் ஸ்டீபன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சு விழா ஆண்டுதோறும் 12 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் கிறிஸ்துவர்கள் பலர் பங்கேற்பார்கள். இந்நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தாண்டு நடைபெறவுள்ள விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கத்தோலிக்க பிரிவு பிஷப் ஸ்டீபன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிஷப் கூறியதாவது …

பனிமய மாதா சர்ச் விழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிபவனி, விருந்து விழா, நற்கருணை பவனி ஆகியவை நடைபெறாது. விழா வருகிற 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. 

ஆகஸ்ட் 5ஆம் தேதி பெருவிழா அன்று தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன், பாளையங்கோட்டை பிஷப் அந்தோணிசாமி, பணி நிறைவு பெற்ற பிஷப் ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

தினமும் காலை 5.30, 6.30, 7.30, 8.30 மணிக்கு பலி நடைபெறும். விழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.. என்றார் பிஷப் ஸ்டீபன்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியபோது…  “வரும் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பனிமய மாதா சர்ச்சு விழாவில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி , பிஷப் ஸ்டீபன், சர்ச் பங்குத்தந்தை குமார் ராஜா, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, அரசுத் துறை சார்ந்த அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் திருவிழா விவகாரத்தில் திருக்கோயிலின் அறிவிப்போடு தகவல் வெளியிட்டுவிட்டு, அதேநேரம் தனியார் அமைப்பான சர்ச் குறித்த விவகாரத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் தாங்களே ஏஜெண்டுகள் போன்று அருகருகே இருந்து பேட்டி அளித்தது இந்து இயக்கங்களால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்துவ சர்ச்சுகளின் நிர்வாகத்திலேயே இயங்குகிறது என்பதை இது மீண்டும் காட்டியிருப்பதாக, இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்து முன்னணியின் மாநில செயலாளர் நெல்லையைச் சேர்ந்த கா.குற்றாலநாதன்!

அவர் இது குறித்து கருத்து தெரிவித்த போது,

பனிமய மாதா சர்ச் விழாவுக்கு பிஷப் பேட்டி கொடுக்கிறார் அருகே மாவட்ட ஆட்சியரும் காவல் துறை எஸ்பிஎம் பரிதாபமாக அமர்ந்திருக்கின்றனர்

இங்கே புரோட்டாகால் சால்னா கால் எல்லாம் அவர்களிடம் செல்லாது போல! அதே நேரம் நம் கோவில் பூசாரிக்கு இந்த மரியாதை கொடுப்பார்களா?

ஸ்டேஷனில் புதுசாக வேலைக்கு வந்த கான்ஸ்டபிள் சென்று பூசாரியை அழைத்து யோவ் பெருசு திருவிழா எல்லாம் நடத்தக்கூடாது புரியுதா இல்லை இன்ஸ்பெக்டர் ஐயா புடிச்சு உள்ள போடுவாரு தெரிஞ்சுதா என்று ஒரு மிரட்டல் விடுவார் அவ்வளவுதான் முடிந்தது

ஐயா பூசாரியை கூப்பிட்டு சத்தம் போட்டாச்சிய்யா… விழா நடத்த மாட்டான்….னு மேலதிகாரிக்கு ஒரு போன்…

அளவுக்கு அதிகமாக சிறுபான்மையைக் கண்டு அஞ்சும் தாஜா செய்யும் அரசு சீரழிந்து போகும். இது வரலாறு நமக்கு கற்றுத்தந்த பாடம் … இவர்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »