
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால், நான்காவது நாளான இன்று அந்த ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார்கள். புதுச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் ‘தி சன் வே மேனர்’ என்ற 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு விடுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.
இது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறியபோது, தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார், அவருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விடுதி அறைகள் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் வேறு விடுதிக்கு மாறுகிறோம். இந்த விவகாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும் வரை புதுச்சேரியை விட்டு நகர மாட்டோம் என கூறினார்.



