திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் ஏ.வி.உயர்நிலைப்பள்ளி
அமைந்துள்ளது. 93 வருட பழமை வாய்ந்த இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்
தான் பயின்ற பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்து
அடிக்கல் நாட்டினார்
பாராளுமன்ற உறுப்பினரும், புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான
கே.ஆர்.பி.பிரபாகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பள்ளிக்கு புதிய
கூடுதல் கட்டிடம்கட்ட ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிக்கான
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி எஸ்.அங்கப்பன் தலைமை
வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) என்.துரைராஜ் வரவேற்றார். பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் கே.ஆர்.அருணாசலம் வாழ்த்தி பேசினார். கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பி. புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட அடிக்கல் நாட்டிபேசினார்
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கீழப்பாவூர் மேலூர் பகுதியில் ரூ.2 லட்சம்
மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சின்டெக்ஸ் டேங்க்கை பிரபாகரன் எம்.பி.
திறந்து வைத்தார். பின்னர் தனது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர்; தேவையை பூர்த்தி செய்யும் வகையில்
பெரியகுளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, நீரேற்றும் நிலையம் வரை பைப் லைன்
அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, அதனையும் எம்.பி. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தேவராஜ், கீழப்பாவூர் ஒன்றிய அதிமுக
செயலாளர் நடராஜன், பேரூர் செயலாளர் பாஸ்கர், இளைஞர் பாசறை செயலாளர்
சேர்மபாண்டியன், பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை, அட்மா சேர்மன் கணபதி,
தொழிலதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
தான் பயின்ற பள்ளிக்கு கட்டிட நிதி வழங்கிய கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பியை
பள்ளி நிர்வாகி ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மற்றும் பொதுமக்கள் தாங்கள்
வாழ்த்துகளை தெரிவித்தனர்
ரூ.42 லட்சத்தில் திட்டப்பணிகள் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.தொடங்கி வைத்தார்
Popular Categories




