குப்பைமேட்டில் மறைவு பகுதி.. அலறிய சிறுமி.. நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumar - 2026

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7 – ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கவுண்டபாளையம் பிரபு நகரை சேர்ந்த 22 வயதான சந்தோஷிற்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து போன் செய்து சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்த சந்தோஷ், அங்குள்ள குப்பைமேட்டின் மறைவான பகுதிக்கு கூட்டி சென்றார். அங்கு அவரது நண்பர் சதீஸுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Screenshot 2020 0806 124817 - 2026

பின்னர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர், இருவரையும் பிடித்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

பின்னர் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் சந்தோஷ் மற்றும் சதீஷை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img