முதல்வரை தங்கள் எல்லையில் வரவேற்ற ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ!

Published:

rajendrabalaji-invite-edappadi
rajendrabalaji-invite-edappadi
  • விருதுநகரில் முதல்வர் பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு…
  • அமைச்சர் தலைமையில் கட்சியினர் திரளாக கூடினர்…..

திருநெல்வேலி மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கவும், ஆய்வு பணிகளுக்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையிலிருந்து இன்று காலை புறப்பட்டார்.

திருநெல்வேலிக்கு செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட எல்லைப்பகுதியான ஆவல்சூரம்பட்டி விலக்கில், முதலமைச்சருக்கு விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதலமைச்சர் பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா உடனிருந்தார். மாவட்ட கலெக்டர் கண்ணன், மாவட்ட எஸ்பி பெருமாள் உட்பட அதிகாரிகளும் முதலமைச்சருக்கு வரவேற்பு வழங்கினார்கள்.

முதலமைச்சர் வருகையையொட்டி விருதுநகர் மாவட்ட எல்லையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

kadambur-raju-invites-edappadi
kadambur-raju-invites-edappadi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையில் மாண்புமிகு தமிழக முதல்வரை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img