26/09/2020 10:54 AM

அணையை சுற்றி பார்க்க சென்ற நண்பர்கள்! தோழர்களின் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்!

சற்றுமுன்...

பரிதாபம்! கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்!

பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

எஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி!

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக...

சரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

பின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

வேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்
Screenshot_2020_0808_144416

அணையை சுற்றிப் பார்க்க சென்ற பயிற்சி டாக்டர் மற்றும் பாலிடெக்னி மாணவர் ஒருவர், நண்பர்களின் கண்முன்பே உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரஞ்சித் (25). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

கொரோனாவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார் ரஞ்சித். இந்நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் பவித்திரன் (17), அவரது அண்ணன் பவீன்குமார் (19), ராஜாசிதம்பரத்தின் மகன் கார்த்திக் (25), கலைச்செல்வனின் மகன் செந்தில்வேலன் (26) மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் ரஞ்சித் கொட்டரை கிராமம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டி முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கொட்டரை அணையை சுற்றிப்பார்க்க சென்றதோடு, கடைசியாக நீர் வழிந்து வெளியேறும் பகுதிக்கு ரஞ்சித், பவித்திரன், செந்தில்வேலன், கார்த்திக் ஆகியோர் சென்றுள்ளனர். மற்றவர்கள் அருகில் இருந்த தரையில் உட்கார்ந்து கொண்டனர்.

ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரும் நீர் வழிந்தோடும் மிகப்பெரிய தடுப்புச்சுவரின் மேலே ஏறியதோடு, நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். சாய்வு தளத்தில் பாசிப்பிடித்து இருந்ததால், ரஞ்சித்தும், பவித்திரனும் கால் வழுக்கி கீழே விழுந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற கார்த்திக்கும், செந்தில்வேலனும் வழுக்கி விழுந்தனர்.

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்து தங்கள் சேலைகள் மூலம் கார்த்திக்கையும், செந்தில்வேலனையும் காப்பாற்றியுள்ளனர். ரஞ்சித்தும், பவித்திரனும் நண்பர்களின் கண்முன்னே நீரில் மூழ்கி இறந்தனர்.

இது குறித்து காவல்துறையினருகட்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர், தீயணைப்பு, மீட்பு வீரர்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் பவித்திரன் உடலை மீட்டனர். பின்னர் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரஞ்சித் உடல் மீட்கப்பட்டது.

இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

செய்திகள்... மேலும் ...

Translate »