ஏப்ரல் 20, 2021, 3:22 காலை செவ்வாய்க்கிழமை
More

  பருவமழை தொடங்குவதால்… காய்ச்சிய நீரையே குடிக்க வேண்டும்: புதுகை ஆட்சியர்!

  ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து

  pudukkottai-district-collector
  pudukkottai-district-collector

  பருவமழை தொடங்க உள்ளதால் பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே குடிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  பொதுமக்கள் நீர்நிலைகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனவும், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
  பருவமழை தொடங்க உள்ளதால் பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே குடிக்க வேண்டும். பொதுமக்கள் நீர்நிலைகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன்
  இருக்க வேண்டும்.

  பருவமழை தொடங்க உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரி, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க
  வேண்டும். குழந்தைகள் சிறுவர்களை பெரியவர்கள் துணையின்றி நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது.

  மழைக்காலங்களில் பொதுமக்கள் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும். காய்ச்சிய பின்னரே குடிநீர் குடிக்க வேண்டும். மழைக்காலத்தில் நீர்வரத்து
  வாய்க்கால்களை கடப்பதை தவிர்க்க வேண்டும்.

  மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் மழைநீர் வீட்டை சுற்றி தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »