December 5, 2025, 8:52 PM
26.7 C
Chennai

மகளின் காதல் விவகாரம்! கழுத்தை நெரித்து கொன்ற தந்தை!

Screenshot_2020_0814_113006

ஆண்டிபட்டியில் ஏற்கனவே திருமணமானவரை காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நாடார் தெருவில் வசித்து வருபவர் முருகன்(வயது 45). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். அவரது மகள் பெயர் தவமணி (வயது 21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தவமணி அதேபகுதியை சேர்ந்த திருமணமான ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தெரிந்தவுடன் தவமணியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தவமணிக்கு திருமண ஏற்பாடும் செய்துள்ளனர்.

ஆனால் தவமணி திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தவமணி, தந்தை என்றும் பாராமல் முருகனை கட்டையால் தாக்கி உள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு ஆத்திரமடைந்த முருகன் தவமணி தூங்கிக் கொண்டிருந்த போது சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

மேலும் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி,உறவினர்கள் உதவியுடன் தவமணியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதுகுறித்து தனிப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்ரீ நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் முருகனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து முருகன் மீது வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் முருகனை கைது செய்து,இறந்த தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமானவரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories