சேலம்: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கணிதத் தேர்வுக்கான தினத்தில், தேர்வு தொடங்கும் முன்னதாக, வாட்ஸ் அப்பில் வினாத்தாள்களை போட்டோ எடுத்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகார் எழுந்தது. இது குறித்து பரவிய தகவலின் அடிப்படையில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், தமிழ்ச்செல்வன் ஆகிய ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி சதவிதத்தைக் கூடுதலாக்கிக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பல பள்ளிகளில் முறைகேடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari