சிறுமியிடம் தகாது நடக்க முயன்ற நபர்! போக்சோவில் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai 1 - 2026

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்த எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த அரிகரன்- மோகனா தம்பதியின் மகள் பவித்ரா (பெயர் மாற்றம்) இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, சுப்ரமணி என்பவர் போதையில் அங்கு வந்துள்ளார். இதனிடையே, தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பவித்ராவின் கையை பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

அவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு அழுத்து கொண்டே சென்றுள்ளார் சிறுமி. அப்போது, நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கோபத்தில் சென்ற சிறுமியின் தாய், சுப்ரமணியிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார் சுப்ரமணியம்.

இந்த நிலையில், வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமியின் தாய். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கூலித் தொழிலாளி சுப்ரமணியத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.