December 5, 2025, 10:31 PM
26.6 C
Chennai

“கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்” (பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)

“கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்”
(பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)

(பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா?
சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா?… பொறிகலங்கிப்
போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பொறியாளர், எல்லாப் புலன்களும் ஒழுங்காக
இருந்ததால், படித்துப் பட்டம் பெற்று பதவியும் பெற்றார்.

இடையில் இப்படி ஓர் இடி.

பார்வை போய்விட்டது; மருத்துவர்கள் மருந்து போட்டார்கள். ஆனால்,போன பார்வை
மருந்துக்குக் கூட வரவில்லை.

மகாஸ்வாமிகள் சென்னையில் முகாம்.

பொறியாளாரால் சுவாமிகளைப் பார்க்க முடியாது தான். ஆனால்,சுவாமிகளின் தெய்வீகக்
குரலை கேட்க முடியுமே! செவிப்புலன் பழுதபடவில்லையே? அத்துடன், சுவாமிகளால்
இவர் பார்க்கப்பட முடியும்…

நாள் தவறாமல், ஆறுமாத காலம், பெரியவாள் பூஜைக்குச் சென்று
கொண்டிருந்தார்.பொறியாளர் வரிசையில் நின்று, தினமும் தீர்த்தப் பிரசாதம்
பெற்றுக் கொள்வார்.

உதவிக்காக உடன் வருபவர்கள்,’பெரியவாள் அனுக்ரஹம்ப ண்ணணும்’ என்று மெய்யுருகப்
பிரார்த்திப்பார்கள்.

மற்ற எல்லா அடியார்களுடனும் பேசும் தெய்வம்-இவருக்கு மட்டும் பதில்
சொன்னதில்லை; வேதனை,இல்லை,பரிசோதனையா?

பத்து நாட்கள் பயங்கரமாகப் போர் செய்யாமலே இராவணனை இராமபிரான் மாய்த்திருக்க
முடியாதோ? ஆனால், அவனுக்கு உயிர் போகும் நொடி வரும்வரை,
காலத்தை கடத்த வேண்டியிருந்தது.

கட்டுமானப் பொறியாளருக்குக் கண் பார்வை கிடைக்க வேண்டிய புண்ணியதருணம் வந்து
விட்டது போலும்.

ஒருநாள், தேவார இசைப்பணிபுரியும் காஞ்சி வரத ஓதுவார் என்ற அடியார், பெரியவாள்
தரிசனத்துக்கு வந்திருந்தார்.

பார்வையில்லாத பொறியாளரை அருகில் வைத்துக்கொண்டு, ஓதுவாருடன் ஒரு சம்பாஷணை.

பெரியவாள் கேள்வி: சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கண்பார்வை ஏன் போனது?

ஓதுவார் விடை: இறைவனுக்குக் கொடுத்திருந்த வாக்கைத் தவறினார்.

“எந்த ஊரில் பார்வை இழந்தார்?”

“திருவொற்றியூர் காலடிப்பேட்டை.”

“பிறகு என்ன செய்தார்?”

“அவ்விடத்திலிருந்து, திருமுல்லைவாயில் சென்று, ‘அமுக்கு மெய்கொடுதிருவடி
அடைந்தேன்’ என்ற பதிகம் பாடி விண்ணப்பம் செய்தார்.’

“அடுத்ததாக என்ன செய்தார்?”

“திருவெண்பாக்கம் என்ற தலத்துக்குச் சென்று, பதிகம் பாடினார். இறைவன் சிறிது
கருணை காட்டி ஊன்றுகோல் அருளினார்.”

“அப்புறம்?”

“காஞ்சிபுரம் சென்று ஏகம்பனை வேண்டினார். ஆலந்தான் உகந்து..என்ற பதிகம் பாடி,
இடது கண் பார்வை பெற்றார்.அருகிலேயுள்ள ஓணக்காந்தன் தளி
திருக்கோவிலுக்குச் சென்று, பொருள் பெற்றார். பின்னர் காஞ்சிப்பகுதியிலேயே
உள்ள திருமேற்றளி அனேகதங்காவதம் சென்று கயிலயங்கிரி நாதனைத்
துதித்தார்.

“அடுத்து?”

“திருவாரூர் சென்றார். மீளா அடிமை…என்று தொடங்கும் பதிகம் பாடி,
புற்றிடங்கொண்டானை வழிபட்டு,உருகி,உருகி வேண்டினார்.வலதுகண் பார்வையும்
பெற்றார்….”

மௌனம்.

“பரமேஸ்வரன் அனுக்ரஹத்தாலே பார்வை கிடைக்கும்.இல்லையா?”

“ஆமாம்”

பொறியாளரைக் கூப்பிட்டு,’சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன ஸ்தலங்களுக்கெல்லாம்,
இந்த ஓதுவாரையும் அழைச்சிண்டு போ. அந்தந்த ஸ்தலங்களுக்கான பதிகங்களை இவர்
பாடுவார்.

“சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஊன்றுகோல் கொடுத்த ஈஸ்வரன் புரசவாக்கம்
கங்காதரேசுவரர் கோவிலில் இருக்கார். முதல்லே, ஓதுவாருடன் போய், அவரை தரிசனம்
பண்ணு;அர்ச்சனை செய்… முக்கண்ணன் அருளினால் பார்வை கிடைக்கும்….”

மகாப்பெரியவாளின் ஆணைப்படி யாத்திரை நடந்தது.

பெரியவாள் வாக்குப்படி பலனும் கிடைத்தது.

பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா?
சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா?…

பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories