காவேரீ புஷ்கரத்தில் காஞ்சி சுவாமிகள் இருவரும் கலந்து கொண்டனர்…
ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்
பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா
ஆகும்.
இந்தியாவில் உள்ள பன்னிரண்டு நதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நதியில்
புஷ்கார விழா நடைபெறும். பன்னிரண்டு நதியும் பன்னிரண்டு ராசிக்கு உரியவையாக
சொல்லப்படுகிறது. அவையாவன. கங்கை-மேஷம், நர்மதை-ரிஷபம், சரஸ்வதி-மிதுனம்,
யமுனை-கடகம், கிருஷ்ணா-கன்னி, காவேரி-துலாம், பீமா – விருச்சிகம், தபதி-தனுஷு,
துங்கபத்திரா-மகரம், சிந்து-கும்பம், ப்ரண்ஹிதா-மீனம். துலாம் ராசிக்கான நதி
காவிரி நதி என்பதால் இந்த ஆண்டு காவேரியில் புஷ்கார விழா நடைபெறுகிறது,
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நதியிலும் நடைபெறும் விழா இது. இது போல
பன்னிரண்டு காவேரி புஷ்கார விழா சுழற்சி நிறைவுறும் போது வருவது காவேரி மகா
புஷ்கார விழா ஆகும்.
144 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா புஷ்கார விழா காவிரியில் நடை பெறுகிறது.
இந்த விழா தொடந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும், ஆன்மீக அன்பர்கள் புனித
நீராடி தங்கள் பாவம் போக்க பிரார்த்தனை செய்வர்.
காவேரியில் பன்னிரண்டு இடங்களில் இந்த மகா புஷ்கர விழா நடை பெரும்,
அவை: மேட்டூர், பள்ளிபாளையம், வேலூர்(நாமக்கல்), பவனி, ஈரோடு, கொடுமுடி,
திருச்சிராப்பள்ளி, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்



