மசூதிக்கு மந்திரிக்க சென்ற தாய்! காதல் வயப்பட்டதால் கழுத்தறுபட்ட ஹஜ்ரத்!

சற்றுமுன்
Screenshot_2020_0818_101813

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது திருநாவலூர் பெரியபட்டு ஏரி. இங்கு கடந்த 14ம் தேதி, ஒருவர் சடலமாக கிடந்தார். அவருக்கு 35 வயசு இருக்கும்.. கழுத்தை அறுத்து கொன்று, இந்த ஏரியில் வீசியுள்ளனர்.
இதை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துவிட்டு அலறி ஓடினர். பிறகு திருநாவலுார் போலீசாருக்கும் விஷயம் போனது.

இதையடுத்து, அந்த சடலத்தையும் மீட்டனர். உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. கழுத்தில் ஆழமாக வெட்டுப்பட்டு இருந்தது. பின்னர், சடலத்தை கைபற்றி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மாட்டத்துக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் ஆரம்பித்தனர். இதற்காக 5 பேர் கொண்ட ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த சமயத்தில்தான், பண்ருட்டி அருகே உள்ள எல்.என் புரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி ஸ்டேஷனில் புகார் தர வந்தார். அவர் சொன்ன அடையாளங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அவர்தான் கொலை செய்யபட்டவர் என்பது தெரிய வந்தது. பெயர் சதாம் உசேன். எல்.என் புரம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் தாக இருந்து வந்துள்ளார் என்பது தெரிந்தது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அவரது செல்போன் நம்பர்களை வைத்து விசாரணை ஆரம்பமானது. அப்போது தான் அன்சாரி என்பவர் சிக்கினார். அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அன்சாரி சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டும் போலீசார் அரண்டு போய்விட்டனர். இவர் பீகாரில் இருந்திருக்கிறார். 12 வருஷத்துக்கு முன்னாடியே இங்கு வந்துவிட்டாராம். டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளது. இந்த குழந்தைக்குதான் திடீரென உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. அப்போது மசூதியில் மந்திரிப்பதற்காக குழந்தையை அன்சாரி மனைவி தூக்கி சென்றுள்ளார். அப்போது, சதாசேனுக்கும் அன்சாரி மனைவிக்கும் கள்ளக்காதல் வந்துவிட்டதாம். 5 வருஷமாகவே இந்த கள்ள காதல் வளர்ந்து வந்துள்ளது. இது தெரிந்து மனைவியை அன்சாரி கண்டித்துள்ளார். ஆனால், காதலனை விட மனைவி தயாராக இல்லை. அதனால் சதாம் உசேனை தீர்த்துகட்ட அன்சாரி பிளான் செய்தார்.

திருநாவலூர் பெரியபட்டு ஏரி அருகே வந்த போது சதாமுசேனை வண்டியை விட்டு இறக்கி, கையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலையும் செய்து ஏரியில் வீசியுள்ளார். இதற்கு 3 பேர் உதவியாக இருந்திருக்கிறார்கள். சதாம் உசேன் உடம்பெல்லாம் கத்தியால் கிழித்தார்களாம். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அஷ்ரப் அலி, சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவரை ஒருவரை தேடி வருகின்றனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.