மடமடவென இடிந்த வீடு! அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்!

சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0818_174540

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பகுதியில் நரிக்குறவர் காலனி இருக்கிறது. இங்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்னதாக, எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த சமயத்தில், நரிக்குறவர்களுக்காக 37 வீடுகள் கட்டிக் கொடுக்கபட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக இந்த குடியிருப்பின் மேற்கூரைகள் அடுத்தடுத்து சேதமடைந்துள்ளது. இதனால் பலர் காயமடைந்தனர். இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே, நேற்று மாலை கணேஷ் என்பவரின் வீட்டில் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

இதில், கணேஷ் அவரது, மனைவி ரேகா மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே அமர்ந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக 5 பேரும் உயிர் தப்பினர்.

இந்த விஷயம் தொடர்பாக கரம்பக்குடி வட்டாட்சியர் அப்துல்லா அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சேதமடைந்து இருக்கும் பிற வீடுகளும் வட்டாட்சியரின் பார்வைக்கு கொண்டு சென்ற நிலையில், வீடுகளை சேர்ந்தவரும் தங்களின் வீட்டின் பரிதாப நிலையைக் காண்பித்தனர். உயிர்ச்சேதம் ஏற்படும் முன்னர் வீடுகளை இடித்து கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை தாசில்தார் வழங்கியுள்ளார்

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.