
தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான்.
கங்கனா ரனாவத் பிரபல நடிகர் ரித்திக் ரோஷனை சில வருடங்களுக்கு முன்புவரை காதலித்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென இவர்கள் இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்பது தற்போது வரை தெரியாமல் இருக்கிறது.

கங்கனா ரனாவத் தூம் படங்களில் நடித்தபோது ரித்திக் ரோஷன் மீது காதலில் விழுந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு முன்னரே இருவரும் காதலித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்
இரவு நேரங்களில் தனிமையில் சந்திப்பது, வெளியில் செல்வது என இருந்துள்ளனர்.
அப்படிப் பலமுறை தன்னுடைய காதலருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார் கங்கனா ரணாவத்.
எல்லாம் கைகூடி வரும் நேரத்தில் திடீர் என தன்னை ஒரு வில்லி போல காட்டி விட்டு பிரிந்து சென்று விட்டார் ரித்திக் ரோஷன் என குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் என்னை விட்டு சென்றாலும் தற்போது வரை அவரை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். என்னுடைய காதல் உண்மையானது எனவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய காதலை வெளிப்படுத்த காரணம், இப்படித்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் உண்மையான காதல் வைத்திருந்த நிலையில் அவரது காதலி ரியா என்பவர் 71 வயது தயாரிப்பாளர் உடன் பணத்துக்காக உறவு வைத்துக் கொண்டு அவருக்கு துரோகம் செய்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.