நெல்லை மாவட்டம் தென்காசி வடகரை அருகே வாவாநகரம் தவ்ஹீத் ஜமாஅத்
துணைச்செயலாளர் முகம்மது உசேன் மனைவி சேகம்மாள் (48) நேற்று காலை இறந்து
விட்டார். அவரின் பிரேதத்தை (ஜனாசாவை) இன்று காலையில் வாவாநகரம் சுன்னத்
ஜமாஅத் பள்ளிவாசல் மய்யவாடியில் அடக்கம் செய்ய சென்ற போது மறுத்ததால்
தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் காலை 9 மணி முதல் அச்சசன்புதூர் காவல்நிலை யத்தை
முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார்
மற்றும் செங்கோட்டை தாசில்தார் ஆகியோர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை
நடத்தினர். ஆனால் இன்னும் தீர்வு இல்லை.




