குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, தற்போது மின்னணு அட்டைகளான ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. அவை அவ்வப்போது ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளியாகி சலசலப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தத்தான் செய்கின்றது.
அண்மையில் ஒரு குடும்பத் தலைவியின் படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் வந்தது. அடுத்து குடும்பத் தலைவரின் புகைப்படத்துக்கு பதிலாக செருப்பு படம் வந்தது. இப்போது லேட்டஸ்ட் விநாயகர் படம். இன்னும் எத்தனை எத்தனை படங்கள் வருமோ தெரியாது!
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துரைத்த ஒருவர், விநாயகர் புகைப்படம் போட்ட மின்னணு குடும்ப அட்டையை தமிழக அரசு வழங்கியுள்ளது. வரலாற்றில் கடவுளுக்கே குடும்ப அட்டை கொடுத்த பெருமை நமது அரசுக்கு உண்டு. இந்த குடும்பம் அட்டையை வழங்க விவரங்களை திரட்டிய அதிகாரியை நீங்கள் பார்த்தால் விநாயகரை பார்த்தற்கு சமம். இன்னும் பல கூத்துக்கள் இந்த ஸ்மாட் குடும்ப அட்டை வழங்குவதில் நடைபெற்றுள்ளது. எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். பொறுமையாகக் காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.



