சென்னை:
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சாகுல் ஹமீது என்றும், அவர் உடனே பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சாகுல் ஹமீதை தில்லியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.



