எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது –
தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தனர்.
பெரும்பான்மை இல்லாததால் 18 எம்எல்ஏ-களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்
முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே 18 எம்எல்ஏ-க்களின் கோரிக்கை
எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய அவகாசம் தரப்படவில்லை : என்றார்
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களின் வழக்கறிஞர்.
ஊழலை மறைக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி யிருக்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழல் செய்வதால் தான் அவரை எதிர்க்கின்றோம்
முதலமைச்சருக்கான ஆதரவை திரும்ப பெற எம்எல்ஏ-க்களுக்கு உரிமை உள்ளது
எம்.எல்.ஏக்கள் 18 பேரும் வேறு கட்சிக்கு தாவவில்லை
பிப். மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர்செல்வம் அணியினர் எதிராக
வாக்களித்தனர்
பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு
அளிக்கப்பட்டது, அது தொடர்பாக எந்த நோட்டீசும் இல்லை
என 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதம்
செய்தார்.
ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை இல்லை என வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் செய்தார்.




