நேத்து கட்சில சேர்ந்தாரு… இன்னிக்கு ‘சப்பை’ வழக்கு! அண்ணாமல நல்லா வருவாரு…!

annamalai-ips-joining-bjp
annamalai-ips-joining-bjp

நேற்றுதான் கட்சியில் சேர்ந்தார்… இன்று அதற்குள் அவர் மீது வழக்குப்பதிவு என்றால் ஆளும் கட்சிக்கு மிகப் பெரும் சவாலாக திகழப் போகிறார் என்பதற்கான முன்னோட்டம்தான் இது என்கின்றனர் சமூக தளங்களில்! யாரைப்பற்றி என்றால் அது முன்னாள் ஐபிஎஸ் கே அண்ணாமலை குறித்துத்தான்

அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தபோது தமிழகத்திலுள்ள திமுக சிந்தனையில் வளர்ந்த ஊடகவியலாளர்கள் உள்பட சமூக ஊடகங்களில் செயல்படும் திக., இடதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் பெரும் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக திமுகவுக்கு உரிய அரசியல் கலையான தனிநபர் கீழ்த்தரமான தாக்குதல்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டனர் 

jbnadda-annamalai
jbnadda-annamalai

அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது இந்நிலையில் ஆளும் கட்சியினரும் தற்போது பாஜகவை எதிர்த்தரப்பு ஆகவே பார்த்து வருகின்றனர்.

அதிமுகவினர் வருங்காலத்தில் தே.ஜ. கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜக மற்றும் இந்து இயக்கங்களின் ஆதரவாளர்கள் இந்து இயக்கத்தினர் மீது பல்வேறு இடங்களில் வழக்குகளை பதிவு செய்து போலீசார் மூலமாக நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் கொடுத்து வருகின்றனர் 

கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சுந்தரவள்ளி உள்ளிட்ட சிலரும் திமுக பிரமுகர்களும் இதுவரை தமிழக அரசியலில் கண்டிராத அளவுக்கு மிகக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்தும் கூட அது குறித்து கொஞ்சமும் சட்டை  செய்யாத தமிழக காவல்துறையினர் ஒன்றும் பெறாத சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களைக் குறிபார்த்து வழக்குப் போடுவது மிகப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவுடனான கூட்டணியிலும் பெருமளவில் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதை எதிர்பார்த்து தான் அதிமுக தலைமையும் இவ்வாறு வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருப்பதாக பேசப்படுகிறது 

அதன் ஒரு வெளிப்பாடாக தான் இப்போது பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உட்பட  ஐந்து பேர்  மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது என்று கூறுகின்றனர் பாஜகவினர் 

இரு தினங்களுக்கு முன் தில்லிக்குச் சென்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குறித்து கீழ்த்தரமான வீடியோக்களை பதிவு செய்து திக., சார்பு சமூக ஊடகவியலாளர்கள் வெளியிட்டு வந்தனர். காரணம் வளர்ச்சி குறித்த அச்சம்.

அதேபோன்ற அச்ச உணர்வு இப்போது ஆளும் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை உட்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது எடப்பாடியின் தலைமையில் இயங்கும் தமிழக காவல் துறை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories