தமிழகத்தில் இன்று.. 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் உயிரிழப்பு!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று  5892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று 92 பேர் உயிரிழந்துள்ளனர் .

தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,45,851ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,608ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின், ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 6110 பேர் கொரொனாவில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,86,173 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82,901 மாதிரிகள் சோதனை செய்யப் பட்டுள்ளன. இதுவரை தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 48,80,769 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-covid-19-sep-03
district-wise-covid-19-sep-03

Related articles

Recent articles

spot_img