ஏப்ரல் 21, 2021, 7:29 மணி புதன்கிழமை
More

  காக்கா முட்டை ஐஸ்வர்யா இல்லை.. இது புளுகு மூட்டை: வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

  நடிகையின் இந்த மட்டமான வேலையை ஆளாளுக்கு இப்போது கலாய்த்து வருகின்றனர்.

  aiswarya-rajesh
  aiswarya-rajesh

  திரை உலகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு கேமரா முன்பு இயக்குனர் சொல்லியபடி வசனம்பேசி நடிக்கும் நடிகன் நடிகைகள் சிலர், திமுக.,வின் எம்.பி.,யும் அரசியல் நாடக இயக்குனருமான கனிமொழி அளித்த உடையை அணிந்து கொண்டு, அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தை உதிர்த்து, சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் வைரலானது. குறிப்பாக டிவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் பதிவிட்டு, அது திமுக.,வின் ஐடி விங் மூலம் வைரல் ஆனது.

  பாஜக.,வுக்கு எதிராக அரசியல் செய்வதாகக் கூறி, வழக்கம் போல் தேச ஒற்றுமைக்கு எதிரான தேசவிரோத அரசியலைச் செய்து வரும் திமுக.,வின் அரசியல் சதி வலையில் திரையுலகினரை விழ வைக்க எடுத்த முயற்சி திமுக.,வுக்கு கைகொடுத்து வருகிறது. அதே நேரம், இந்த காட்சியில் நடிக்கும் நடிக நடிகைகள், வடிவேலு மார்க்கெட் இழந்ததைப் போல் தங்கள் மார்க்கெட்டும் இழந்து, தெருவுக்கு வரப் போகிறார்கள் என்பதை பலரும் டிவிட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றன. திமுக., சொல்படி ஆடும் திரையுலகினருக்கு நாளை எத்தகைய நிலை வருமென்பதை வடிவேலு விளக்கிச் சொல்வார் என்று அவர்கள் தங்கள் கருத்துகளில் தெரிவித்து வருகின்றனர்.

  aiswarya-rajesh1
  aiswarya-rajesh1

  கனிமொழி எடுத்துக் கொடுக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தம்பியுடன் சேர்ந்து ” இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று இந்தியில் பேசியது இப்போது பதிவிடப் பட்டு வருகிறது. இந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டு “எதுக்கு இந்த கேவலமான வேலை? என விமர்சிக்கின்றனர் பலர்.

  இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக அரசியல் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷின் மற்றொரு வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பேட்டி ஒன்றில் “சேரி என்றால் என்ன? அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என பிறப்பிலேயே சில்வர் ஸ்பூன் டான் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது போல் பேசியுள்ளார். இதற்கு முன்னர் அவரே, மேடை ஒன்றில் தன் வளர்ச்சியை குறித்து பேசும் போது, தான் சேரியில் பிறந்து வளர்ந்தவள் என்று கூறி அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தார்.

  நடிகையின் இந்த மட்டமான வேலையை ஆளாளுக்கு இப்போது கலாய்த்து வருகின்றனர்.

  ?தி மு க MP கனிமொழி அச்சடித்து கொடுத்த பனியனை மாற்றிக்கொண்டு ஒரு பத்திரிகையாளர் R.K என்கிற ராதாகிருஷ்ணன் மற்றும் ஒரு சினிமா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போது விவாதத்தின் போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களுக்கு ஹிந்தி தெரியாது என்று சொல்லி வேற ஒரு வீடியோவில் மாட்டி கொண்ட போது சிக்கிய பதிவு .. ?

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »