நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி ஜாய் பப்ளிக் பள்ளியில் இந்திய
முஸ்லீம் லீக் மற்றும் ஷிபா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
நடந்தது.
மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். செங்கோட்டை காவல்
ஆய்வாளர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர்
எம்.நவாஸ்கான் வரவேற்றார்.
இந்த மருத்துவ முகாமை கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ முகமது அபுபக்கர் துவக்கி
வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முகாமில் நெல்லை ஷிபா மருத்துவமனை மருத்துவக் குழுவினர்கள் கலந்து கொண்டு
இருதயம், எலும்பு மூட்டு, முதுகு தண்டு வடம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு
மருத்துவம் மற்றும் இலவச ஆலோசனைகள் வழங்கினர். இதில் சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் உரிமையாளர் முஹம்மது ஷாபி, பண்பொழி
பேருராட்சி செயல் அலுவலர் முரளி, மாவட்டச் செயலாளர் இக்பால், பொருளாளர்
செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜாய் பப்ளிக் பள்ளியின் தாளாளர் அலெக்ஸ் நன்றி கூறினார்.






