நேற்று காலமான பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜாவினி தந்தை மறைவுக்கு மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல்செய்தியில், ஓய்வுபெற்ற பேராசிரியரும், மூத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரும், பாஜக தேசியச் செயலாளர் சகோதரர் H. ராஜாவின் தந்தையுமான ஹரிஹரன் அவர்கள் (30.09.2017) மறைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை சகோதரர் H. ராஜா அவர்களுக்கு வழங்கவும், ஹரிஹரன் அவர்களின் ஆன்மா நற்கதியடைவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
அதுபோல், இந்து முன்னணி முன்னாள் மாநில துணைத் தலைவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த மு. கல்யாணி தேவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று (01.10.2017) காலை மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் இயக்க சகோதரர்களின் துயரத்தில் பங்கு கொள்வதுடன், அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.. என்று தெரிவித்துள்ளார்.



