கொரோனா: தமிழ் நடிகர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
plorint

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ் திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் பெரைரா இன்று காலமானார். அவருக்கு வயது 67.

நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ப்ளோரன்ட் பெரைரா. இதை தொடர்ந்து இவர் கும்கி,கயல், தொடரி, பொதுவாக எம்மனசு தங்கம், தர்மதுரை உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளிலும் நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.