சென்னையில் 12 இடங்களில் ஹெல்மெட் ஜோன்…

சென்னை நகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியும் “ஹெல்மெட் ஜோன்”(தலைகவசம் மண்டலம்) பகுதிகளை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த 12-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்குள் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் நுழையும் போதும், வெளியேறும் போதும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்கிறார்களாக என்பதை தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுகையில், “ சென்னை நகரில் விபத்துக்களை தடுக்கும் வகையில், 12 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். 
இந்த பகுதிகளை “ஹெல்மெட் ஜோன்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதற்கு துணை ஆணையர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 12-க்கும் மேற்பட்ட இடங்கள் என்ன என்று பொதுமக்களுக்கு கூற மாட்டோம். இந்த 12 பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் கே.பிரையா கூறுகையில், “ சென்னை சாலையில் பெரும்பகுதியான இடங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து தான்செல்கி றார்கள். 
அதேதமயம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்பவர்கள் ஆகியோரை பிடித்து ஒரு மணி நேரம் ஓடக்கூடிய சாலைபாதுகாப்பு விதிகள், அதை மீறுவதால், ஏற்படும் துயரங்கள் என்ற ஒரு மணிநேர குறும்படத்தை பார்க்க கட்டாயப்படுத்துவோம். இந்த குறும்படம் ஏறக்குறைய ஒருமணிநேரம் திரையிடப்படும், இதை முழுமையாக பாரத்துமுடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் என்பதன் கீழ் 18 ஆயிரத்து 894 வழக்குகள், சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக, 23 ஆயிரத்து 552 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
வாகனம்ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 3 ஆயிரத்து 115 வழக்குகளும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 5 ஆயிரத்து 168 வழக்குகளும், அதிகசுமை ஏற்றிச் சென்றதாக ஆயிரத்து 56 வழக்குளும், சரக்குவாகனத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்றதாக 189 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 14 லட்சத்து 37 ஆயிரத்து 816 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன .
 இதன் மூலம் போலீசார் ரூ.16.39 கோடி அபராதமாக விதிகளை மீறுவோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி.. கே.சி.சாமி
ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories