தமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு!

Published:

corona-image-1
corona-image-1

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து உள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 7,16,751 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,97,751 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 42,516 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,859 பேர், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,79,377 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img