பிரதமர் மோடியின் படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக.,வினர் தற்போது இயங்கி வருகின்றனர். அரசு அலுவலகங்களுக்குச் சென்று பிரதமர் மோடியின் படத்தை மாட்டச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இன்று பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் கரூர் மாவட்டம் கரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி திருஉருவப் படத்தை வைக்குமாறு கோரி மனு அளிக்கப் பட்டுள்ளது.
பாஜக., பட்டியல் அணி தலைவர் முருகேசன் ஏற்பாட்டில், மாவட்ட பட்டியல் அணி கரூர் வடக்கு மண்டல் தலைவர் V. லெட்சுமணன் தலைமையில் கரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பாரத பிரதமர் திருஉருவப்படம் வைக்க மனு கொடுக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் மகேஷ்குமார் மற்றும் மண்டல் தலைவர்கள் கார்த்திகேயன், தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்!