திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் கோயில் பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகளை 110 பணியாளர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் குருமகா சன்னிதானம் வழங்கினார்
திருவிடைமருதூரில் மகாலிங்கசுவாமி கோவில் உள்ளது இக்கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஜவுளி மற்றும் ரூ ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்படுவது வழக்கம்
அதன்படி திருவாவடுதுறை பகுதியில் உள்ள கோயில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியில் 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கி முதற்கட்டமாக 110 கோயில் பணியாளர்களுக்கு ரூ ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கி அருளாசி வழங்கினார்
மொத்தம் 110 பணியாளர்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக குருமகாசன்னிதானம் தனது அருளாசியின் போது தெரிவித்தார்