
இந்துக்களின் கடைகளில்,வணிக நிறுவனங்களில் பூஜை செய்து வியாபாரம் தொடங்குவது வழக்கம். இதை வியாபாரமாக சில இஸ்லாமியர்கள் சாம்பிராணி போடுவது போல் ஹிந்து கடைகளுக்கு சென்று அவர்கள் பாணியில் குல்லா அணிந்து ஹிந்து கடைகளுக்கு சாம்பிராணி போடுவது வழக்கம். இதை போல் தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் ஹிந்து ஒருவர் வறுமையின் காரணமாக சாமி தரிசனம் செய்து அனைத்து கடைகளுக்கும் விபூதி பூசிய நெற்றியுடன் சாம்பிராணி போடத் துவங்கினார். இதை பொறுக்க முடியாத இஸ்லாமியர் ஹிந்துக்கள் முன்பே நீ எப்படி இஸ்லாமியர்கள் கடையில் சாம்பிராணி போடலாம் என மிரட்டல் விட்டு அடிக்கும் காட்சி. என்று திருந்தும் ஹிந்து சமுதாயம்? இந்த இஸ்லாமியர்கள் கைது செய்யப்படும் வரை அனைவரும் பகிருங்கள்… – என்று குறிப்பிட்டு, ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது
இந்நிலையில், சாம்பிராணி புகை போட்டவரை தாக்கிய அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த கூறப்படுவதாவது… தென்காசியில் சாம்பிராணி புகை போடும் தொழிலாளி சந்திரமோகன் (45 வயது) தாக்கியதாக கோழிக்கறி கடை நடத்தும் அகமது ரியாஸ் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரது இயற்பெயர் தங்கராஜ் என்றும், இஸ்லாமியராக மாறி தனது பெயரை அகமது ரியாஸ் என்று வைத்துக் கொண்டு, கோழிக்கறி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
தென்காசியை சேர்ந்த சந்திரமோகன், கடைகளில் சாம்பிராணி புகை போடும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்திரமோகனை, அகமது ரியாஸ் கடுமையாக தாக்கினார் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது
இந்நிலையில், காயமடைந்த சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது கடையில் ஏன் சாம்பிராணி புகை போட்டாய் என்று கேட்டு அவரை ரியாஸ் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தென்காசியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று இந்து முன்னணியினர் தென்காசி சிவன் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்