தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
தென்காசியில் உள்ள விசாலாட்சி அம்மை – உலகம்மன் சமேத ஸ்ரீ காசிவிசுவநாதர் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருக்கல்யாண உத்ஸவத்தை தரிசித்து அருள் பெற்றனர்.
முன்னதாக, பக்தர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உத்ஸவத்தை காண பக்தர்களுக்கு அதிகாலையில் அனுமதி மறுக்கப் பட்டது. இது நெல்லை வட்டார மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பலரும் அறநிலையத்துறை அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்தையும் வசைபாடினர்.
இந்த நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தென்காசி கோயிலில் இரவு நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவத்தில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.