மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெ. கடுமையாக கோபமடைந்தார்: சு.சுவாமி புது குண்டு’
மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெயலலிதா மிகவும் கோபமடைந்தார் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் தாம் தான பெங்களூரு அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதே அம்ருதா, ஜெயலலிதாவை பெரியம்மா என கூறிவந்தார்.
திடீரென தாமே ஜெயலலிதாவின் மகள் என கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றமோ, கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அம்ருதாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு 1980-ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் அந்த குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபுதான் என்றும் அவரது அத்தை மகள் லலிதா திட்டவட்டமாக கூறி வருகிறார். லலலிதாவின் இந்த தகவல் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.
இதனிடையே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து கூறியதாவது: 1991-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தேன். அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நேரம். ஜெயலலிதா வீட்டில் இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதாவும் நானும்தான் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, மகள் இருப்பதாக ஒரு பிரசாரம் செய்யப்படுகிறதே என ஜெயலலிதாவிடம் கேட்டேன்.
அதற்கு மிகவும் அதிகமாக கோபப்பட்டார் ஜெயலலிதா. இதெல்லாம் கருணாநிதியின் பொய் பிரசாரம் எனவும் கொந்தளித்தார். தற்போது ஒரு பெண் நீதிமன்றத்துக்கு மகள் என போயிருக்கிறார்.
அவர் ஜெயலலிதாவின் மகள்தானா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.